Friday, September 19, 2008

கல்லூரி

இதை கூறும் போதே மனதிற்குள் ஏதோ ஒன்றை தொலைத்த உணர்வு வருகிறது... பசுமை நிறைந்த நினைவுகளே பாடல் கேட்கும் போதெல்லாம் இதயம் கனக்கிறது...ஆம் நான்கு ஆண்டுகள் கல்லூரியில் சிறகடித்து பறந்தோம்... நிறைய நல்லஅனுபவங்களை கொடுத்தது என் கல்லூரி வாழ்க்கை... என்னுடைய மனதில் மிக அழுத்தமாக பதிந்த நாட்கள் இந்த கல்லூரி நாட்கள்... எனக்கு நிறைய நல்ல தோழர்களையும் தோழிகளையும் கொடுத்தது இந்த கல்லூரி...

முதலாம் ஆண்டு வீட்டை பிரிந்து வருந்திய நாங்கள் இறுதி ஆண்டில் வீட்டில் இருந்து அழைப்பு வரும் வரை வீட்டிற்கு செல்லாமல் மாற்றியது இந்த கல்லூரியும் அங்கு கிடைத்த சிறந்த நண்பர்களும்... இது போன்ற சிறந்த நண்பர்கள் கிடைத்தாலும் இனி என் வாழ்க்கையில் பார்க்க கூடாது என்று நினைத்த நபர்களும் உண்டு... பத்து ரூபாயில் நல்ல உணவு அருந்த முடியுமா... நூறு ரூபாய்க்கு நான்கு நபர்கள் விருந்து சாப்பிட முடியுமா ... இன்று இது கேள்விக்குறியாக தோன்றினாலும் அன்று இது நிதர்சமான உண்மை... தனிமை என்றால் என்னவென்று எனக்கு தெரியாத காலம் ...மனதில் பயம் என்பதை மறந்திருந்த காலம் (தேர்வு முடிவுகள் மட்டும் விதிவிலக்கு)... எனக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்று என்ன முடியாத காலம்... மனதில் பேராசை இல்லாத காலம்... கனவுகள் நிறைந்து இருந்த காலம்...

உன்னுடைய விடுதி அறையில் நீ வங்கி வயித்த பற்பசை எண்ணெய் எல்லாம் நீ மட்டுமே உபயோகித்தால் உன்னை விட துரதிர்ஷ்டசாலி யாரும் இல்லை... எவ்வளவு சீக்கிரமாக காலி ஆகிறதோ உனக்கு அவ்வளவு நண்பர்கள் என்று அர்த்தம்

முதல் நாள் கல்லூரியில் சேர்க்க தந்தையுடன் கல்லூரி சென்றேன். கசப்பு கடைக்கு போகும் ஆடு போன்ற பயம்தான் மனதில். கல்லூரி கேண்டீன் முதல் உணவு பொங்கல் ... அன்னைக்கு மட்டும் நல்ல செய்வாங்க போல... அப்புறம் விடுதி சேர்க்கை  தொடங்கியது. முதலில் கண்டது சந்திரன் மற்றும் ராஜேஷ் ...எங்களுக்கு ஒரே அறை கிடைத்தது ... (P  308) ... அன்று தெரியாது நானும் சந்திரனும் நான்கு ஆண்டுகளும் ஒரு அறையில் வசிப்போம்  என்று ...   ஒரு சிறிய அறை ... மின் விசிறி கிடையாது ... தொடர் வண்டி போல அடுக்கு படுக்கை ... ஒரு படுக்கை மட்டும் தனியே ...ஒரு பெட்டி, ஒரு வாளி ஒரு mug , அவ்வளவுதான்  எங்கள் சொத்து ... அன்று அலைபேசி எல்லாம் இல்லை ... நாங்கள் குடுத்து வைத்தவர்கள்   ... தொடரும் ...

No comments: