Sunday, June 21, 2009

வரம்

மீண்டும் தாயின் மடியில் குழந்தையாக
மீண்டும் தந்தையின் மார்பில் சிறுவனாக
மீண்டும் பாசமிகு நண்பர்களின் பள்ளி தோழனாக
மீண்டும் சகோதரியிடம் சண்டையிடும் எதிரியாக
மீண்டும் சகோதரனின் கை பிடித்து விளையாட செல்பவனாக
மீண்டும் ஓருயிர் பல உடலென கல்லூரி மாணவனாக
இதில் ஏதேனும் ஒன்று வரமாய் கிடைக்குமெனில்
எத்தகைய தவமும் இருக்க நான் தயார்...

Wednesday, November 5, 2008

வெளிநாட்டு கலாச்சாரம்

நான் இங்கே எழுத முற்படுவது வெளிநாட்டு கலாச்சாரத்தை பற்றி.... நான் வெளிநாட்டில் தற்காலிகமாக குடி இருப்பதனால் இங்குள்ள கலாச்சாரத்திற்கு கொடி பிடிப்பவன் என்று நினைக்க வேண்டாம்... நமக்கு தெரிந்தது எல்லாம் இவர்கள் இரவில் மேடையில் நடனமாடுபவர்கள்... பல பெண்களை மணந்து கொள்பவர்கள்... குடிப்பது... இவைதான்

நாம் நம்முடைய கலாச்சாரம் என்ற பெயரில் பல அடிமை தனத்தை கொண்டுள்ளோம்... நம்முடைய கலாச்சாரத்தை மொத்தமா குறை சொல்லவில்லை ஆனால் நாம் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டும்... கல் ஆனாலும் கணவன் என்ற பேரில் பலர் செய்யும் அநியாயங்களை சகித்து வாழும் பெண்கள் பலர்... ஏன் என்றால் கல்யாணம் செய்து கொடுத்த பெண் வீட்டிற்கு வந்தால் பெற்றோருக்கு அவமானமாம்... அதற்காக தன்னுடைய பெண்ணிற்கு நடக்கும் கொடுமைகளை சகித்து கொண்டு வாழும் பெற்றோர் பலர்... ஆனால் இந்த கொடுமைகள் இங்கே குறைவு... தனக்கு பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து வாங்கி வேறொருவருடன் வாழும் சுதந்திரம் இங்குள்ளது... இதை யாரும் தவறாக பார்ப்பதில்லை... ஆனால் நாம் நமக்கு தெரிந்தவர்களுக்கோ இல்லை நமது உறவினர்களுக்கோ இது நடக்கும் வரை நாம் இதை உணருவது இல்லை... அதனால் தங்கள் வாழ்நாள் வரை பெண்களை கொடுமை படுத்தி வாழும் அரக்கர்கள் (psychos) நாம்தான் ஆதரித்து வருகிறோம்... இந்த விசயத்தில் வெள்ளைக்காரன் நம்மை விட உயர்ந்தவர்களாக தெரியவில்லை ?

குப்பைகளை தெருவில் போடுவது... இது நாம் கலாச்சாரம் அல்ல நம் பழக்கம்... ஒருவர் அவர் வைத்திருக்கும் குப்பையை தெருவில் போடுவது வேண்டுமானால் இங்குள்ள சட்டத்திற்கு கட்டு பட்டோ இல்லை அபராதத்திற்கு கடுப்பட்டோ இருக்கலாம்... வேறொருவன் குப்பையை தெருவில் போட்டால் கூட அதை எடுத்து குப்பை தொட்டியில் போடுவது என்பது சிறந்த பழக்கம் அன்றி வேறன்ன சொல்லுவது...
தொடரும் ...

Sunday, October 12, 2008

பாரதியார் வரிகள்

ஜாதி பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வென்றும் மேல்வேன்றும் கொள்வார்!!!
ஏவல்கள் செய்பவர் மக்கள் அவர் யாவரும் ஓர் குலமன்றோ...
ஜாதி கொடுமைகள் வேண்டாம்.. அன்புதனில் ஜெய்திடும் வையம்...
ஆதரவிற்று இங்கு வாழ்வோம் .. தொழில் ஆயிரம் செழித்திட செய்வோம்!!!

துச்சமாக நம்மை எண்ணி தூறு செய்த போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்பது இல்லையே...
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்பது இல்லையே...
இச்சகத்து உளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்பது இல்லையே...
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்பது இல்லையே...

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்!!!

Saturday, September 20, 2008

எதிர்பார்ப்பு

உனக்காக காத்திருக்கும் இதயங்களுக்காக 
என்றும் காத்திரு 
உன்னை காக்க வைக்கும் இதயங்கள் 
உனக்காக காத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே

Friday, September 19, 2008

கல்லூரி

இதை கூறும் போதே மனதிற்குள் ஏதோ ஒன்றை தொலைத்த உணர்வு வருகிறது... பசுமை நிறைந்த நினைவுகளே பாடல் கேட்கும் போதெல்லாம் இதயம் கனக்கிறது...ஆம் நான்கு ஆண்டுகள் கல்லூரியில் சிறகடித்து பறந்தோம்... நிறைய நல்லஅனுபவங்களை கொடுத்தது என் கல்லூரி வாழ்க்கை... என்னுடைய மனதில் மிக அழுத்தமாக பதிந்த நாட்கள் இந்த கல்லூரி நாட்கள்... எனக்கு நிறைய நல்ல தோழர்களையும் தோழிகளையும் கொடுத்தது இந்த கல்லூரி...

முதலாம் ஆண்டு வீட்டை பிரிந்து வருந்திய நாங்கள் இறுதி ஆண்டில் வீட்டில் இருந்து அழைப்பு வரும் வரை வீட்டிற்கு செல்லாமல் மாற்றியது இந்த கல்லூரியும் அங்கு கிடைத்த சிறந்த நண்பர்களும்... இது போன்ற சிறந்த நண்பர்கள் கிடைத்தாலும் இனி என் வாழ்க்கையில் பார்க்க கூடாது என்று நினைத்த நபர்களும் உண்டு... பத்து ரூபாயில் நல்ல உணவு அருந்த முடியுமா... நூறு ரூபாய்க்கு நான்கு நபர்கள் விருந்து சாப்பிட முடியுமா ... இன்று இது கேள்விக்குறியாக தோன்றினாலும் அன்று இது நிதர்சமான உண்மை... தனிமை என்றால் என்னவென்று எனக்கு தெரியாத காலம் ...மனதில் பயம் என்பதை மறந்திருந்த காலம் (தேர்வு முடிவுகள் மட்டும் விதிவிலக்கு)... எனக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்று என்ன முடியாத காலம்... மனதில் பேராசை இல்லாத காலம்... கனவுகள் நிறைந்து இருந்த காலம்...

உன்னுடைய விடுதி அறையில் நீ வங்கி வயித்த பற்பசை எண்ணெய் எல்லாம் நீ மட்டுமே உபயோகித்தால் உன்னை விட துரதிர்ஷ்டசாலி யாரும் இல்லை... எவ்வளவு சீக்கிரமாக காலி ஆகிறதோ உனக்கு அவ்வளவு நண்பர்கள் என்று அர்த்தம்

முதல் நாள் கல்லூரியில் சேர்க்க தந்தையுடன் கல்லூரி சென்றேன். கசப்பு கடைக்கு போகும் ஆடு போன்ற பயம்தான் மனதில். கல்லூரி கேண்டீன் முதல் உணவு பொங்கல் ... அன்னைக்கு மட்டும் நல்ல செய்வாங்க போல... அப்புறம் விடுதி சேர்க்கை  தொடங்கியது. முதலில் கண்டது சந்திரன் மற்றும் ராஜேஷ் ...எங்களுக்கு ஒரே அறை கிடைத்தது ... (P  308) ... அன்று தெரியாது நானும் சந்திரனும் நான்கு ஆண்டுகளும் ஒரு அறையில் வசிப்போம்  என்று ...   ஒரு சிறிய அறை ... மின் விசிறி கிடையாது ... தொடர் வண்டி போல அடுக்கு படுக்கை ... ஒரு படுக்கை மட்டும் தனியே ...ஒரு பெட்டி, ஒரு வாளி ஒரு mug , அவ்வளவுதான்  எங்கள் சொத்து ... அன்று அலைபேசி எல்லாம் இல்லை ... நாங்கள் குடுத்து வைத்தவர்கள்   ... தொடரும் ...

Wednesday, September 17, 2008